search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்"

    • ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது.
    • பக்தர்கள் கொடிக் கயிறு, சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது. இதனையொட்டி ஆற்றூர் அருகே பள்ளிக்குழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலில் இருந்து பக்தர்கள் கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    மேலும் முத்துக் குடை, தாலப்பொலியுடன், நாராயணா நாராயணா என்ற மந்திரம் முழங்க கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக சென்று ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு சென்றனர். கொடி கயிறை அர்ச்சகர் கருவறையில் பூஜையில் வைத்தார்.

    திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் வலம் வருதல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 10-ம் நாள் திருவிழாவில் சுவாமி ஆராட்டு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து மாலை தீபாராதனைக்கு முன்னதாக கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    பின்னர் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் பவனி வருதலும், விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 20-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் இறுதி நாளான 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்காக கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச் சென்று ஆராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சுவாமி மீண்டும் கோவிலுக்கு புறப்படுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா.
    • லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா நடந்தது. அதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை அலங்கார தீபாராதனைக்கு முன்னதாக கோவில் பிரகார விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்ச தீப விழா நடந்தது. சிறுமிகள், பக்தர்கள், பெண்கள் போட்டி போட்டு விளக்கேற்றினர். லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பெருந்தமிர்து பூஜை இன்று காலை தொடங்கி மதியம் வரை நடக்கிறது.
    • ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று ஆடிமாதம் முதல் தேதி என்பதால் பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆடி மாதம் இரண்டாம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவப்பெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் வரை நடக்கிறது.

    முன்னதாக உதயமார்த்தாண்ட மண்டபத்தில் கலசங்கள் நீர் நிரப்பப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. பூஜைகளுக்கு பின்னர் ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் குழுவினர் செய்துள்ளனர்.

    • தங்கத்தால் ஆன சிவன் 40 ஆண்டுகளாக கருவூலத்தில் இருக்கிறது.
    • இந்த சிலை சுமார் 8 கிலோ 900 கிராம் எடையுள்ளது.

    திருவட்டார் ஆதிகேசவ சேவா டிரஸ்ட் செயலாளர் தங்கப்பன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குரிய நகைகள், சிலைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை கோவிலில் பூஜைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்று கடந்த மாதம் ஆதிகேசவ பெருமாளுக்கு சொந்தமான ஆபரணங்கள், மரகதங்கள், கும்ப கலசங்கள், பஞ்சலோக விக்கிரகங்கள் அனைத்தையும் கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி முன்னிலையில் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் உள்ள கருவூலத்தில் ஆய்வு செய்து மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கருவூலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டதில் சுமார் 40 வருடங்களுக்கு முன் வரை ஆதிகேசவ பெருமாளின் பாத பகுதியில் பூஜையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தங்கத்தினால் ஆன சுமார் 8 கிலோ 900 கிராம் எடையுள்ள சிவன் சிலை மீட்டு எடுக்கப்பட்டது.

    தங்க சிலை மற்றும் வட்ட வடிவ பீடத்தின் மச்சத்தை கணக்கிட்ட நகை மதிப்பீட்டு வல்லுனர், பரிசோதனை செய்ததில் இவ்விரு இனங்களும் தங்கத்தால் ஆனது எனவும், மிகவும் பழமை வாய்ந்தது எனவும் சான்று அளித்தார். பின்னர் தங்க சிலை, பீடம் ஆகியன கருவூலத்தில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டப்பட்டு லாக்கர் சாவிகள் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சுமார் 40 வருடங்களுக்கு மேல் பூஜையின்றி கருவூலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ 900 கிராம் தங்க சிவன் சிலையை உடனே பரிகார பூஜைகள் செய்து ஆதிகேசவ பெருமாளிடம் முன்பு இருந்தது போன்று பிரதிஷ்டை செய்து தொன்று தொட்டு நடைபெற்று வந்த வழிபாட்டு முறையை மீண்டும் தொடர்ந்து நடத்த அறநிலையத்துறை முன்வரவேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
    • மாலையில் ‘லட்சதீப விழா’ நடக்கிறது.

    108 வைணவத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தமிழ் மாதமான ஆனி மாத உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான இன்று (திங்கட்கிழமை) வருஷாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி நேற்று 'சாக்கியார் கூத்து' எனப்படும் நகைச்சுவை நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சி கேரளாவுடன் குமரி இணைந்திருந்த போது நடைபெற்று வந்தது. பின்னர் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த பின்னர் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. பாரம்பரியம் மிக்க இந்த கலையை தற்போது 67 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சூரை சேர்ந்த கலா மண்டலம் சங்கீத் சாக்கியார் நிகழ்த்தினார்.

    மேலும், வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

    பின்னர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சாமி, அய்யப்ப சாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும். மாலையில் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் 'லட்சதீப விழா' நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர்.

    வருஷாபிஷேகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை.
    • மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது.

    திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு ஆனி மாத உத்திரம் நட்சத்திர நாளான வருகிற 26-ந்தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதிஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவபெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ணசாமி, அய்யப்பசாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவகலச அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, மதியம் அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. கும்பாபிஷேகத்தின் போது ரூ.17 லட்சத்தில் வெளிப்புறத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால், கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை. இதனால் திடீரென மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது. கோவிலில் பூஜைகளின்போது தவில், நாதஸ்வரம் இசைக்காமல் நடைபெறுவது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

    எனவே தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும், 25-க்கும் மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த இடத்தில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் வழிபாட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கருவறையை சுற்றி மியூரல் ஓவியங்கள் ரூ.75 லட்சத்தில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் அரைகுறையாக நடைபெற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆதிகேசவப்பெருமாளின் மூலவர் விக்கிரகத்தின் மீது அணிவிக்க புதியதாக தங்க அங்கி செய்து சார்த்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் வருஷாபிஷேகம் நடைபெறுதற்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட புனரமைப்பு பணிகளை முழமையாக முடித்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ‘திருவிலக்கம்’ நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
    • இன்று மாலை 5.30 மணிக்கு ஆராட்டு விழா நடக்கிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சாமி வாகனத்தில் பவனி வருதல், ஹரிநாம கீர்த்தனம், சொற்பொழிவு, பரத நாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் துரியோதன வதம் கதகளி நடந்தது.

    விழாவின் 9-வது நாளான நேற்று மாலையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும், எந்தவித வாத்தியக்கருவிகளும் ஒலிக்காமல் நிசப்தமாக தளியல் சிவன் கோவில் பகுதியில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளினர். தேங்காயில் அம்பு எய்யும் வேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மேள தாளம் முழங்க சிவன் கோவில், கருடாழ்வார் கோவில், பஜனை மடம், தளியல் முத்தாரம்மன் கோவில், நான்குமுனை சந்திப்பு வழியாக கோவிலுக்கு திரும்பி வந்தனர்.

    வேட்டை முடிந்து திரும்பி வரும்போது வீடுகளில் இருந்து பக்தர்கள் மலர்களால் சாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். கோவில் உள்ளே ஆதிகேசவ பெருமாள் விக்ரகம் கொண்டு செல்லப்பட்ட பின்பு கிராதம் கதகளி நடந்தது.

    விழாவில் இன்று (புதன்கிழமை) காலை கோவில் நடை தாமதமாகவே திறக்கப்படும். நேற்று வேட்டை நிகழ்ச்சி நடந்ததால் கோவிலை புனிதப் படுத்தும் 'திருவிலக்கம்' நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடைபெறும். மாலை 5.30 மணிக்கு ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம் ஆற்றில் ஆராட்டு விழாவுக்கு எழுந்தருளுகின்றனர். ஆராட்டு ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்ததை சென்றடையும். அங்கு ஆராட்டு மற்றும் பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

    • சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடந்தது.
    • புதிதாக கமுகுமரம் நாட்டப்பட்டு அதில் கொடிமர பூஜைகள் நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனித்திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை தீபாராதனையை தொடர்ந்து திருவாதிரைக்களி, பரத நாட்டியம் ஆகியவை நடந்தது.

    இதே கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணசாமி சன்னதியில் புதிதாக கமுகுமரம் நாட்டப்பட்டு அதில் கொடிமர பூஜைகள் நடந்தது. பூஜைகளைத்தொடர்ந்து தந்திரி சஜித் சங்கரநாராயணரு கருடன் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை கொடிமரத்தில் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரவில் சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடந்தது.

    • 3-ந்தேதி துரியோதன வதம் கதகளி நடக்கிறது.
    • 4-ந்தேதி சாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா காவில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    இந்த ஊர்வலம் மேளதாளம் முழங்க பல்வேறு இந்து இயக்கத்தினர், பக்தர்கள் புடைசூழ ஆற்றூர், கழுவன்திட்டை, சந்தை சந்திப்பு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் கோவில் பிரகாரம் மற்றும் கருவறையை சுற்றி வந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் ஆதிகேசவ பெருமாள் முன்பு கொடிக்கயிறு சமர்ப்பிக்கப்பட்டது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலையில் நிர்மால்ய தரிசனம், ஹரிநாம கீர்த்தனத்தை, சிறப்பு அபிஷேகம் போன்றவை நடந்தது.

    காலை 9 மணிக்கு வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்று விழா பூஜைகளை கோவில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு நடத்தினார். குழித்துறை தேவசம் சூப்பிரண்டு சிவகுமார், கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் தீபாராதனை, இரவு நாற்காலி வாகனத்தில் சாமி பவனி வருதல் ஆகியவை நடந்தது.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி போன்றவையும், நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 6 மணிக்கு நம்மாழ்வார் குறித்து ஆன்மிக சொற்பொழிவு, இரவு 7.45 மணிக்கு தேவார பஜனை, இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியவையும் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 7.30 மணிக்கு பரத நாட்டியம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் ஆகியவையும், 3-ந் தேதி இரவு 9 மணிக்கு நாற்காலி வாகனத்தில் சாமி பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, 9.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 12 மணிக்கு கிராதம் கதகளி ஆகியவையும், விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி ஆராட்டு விழாவுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் போன்றவையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • இந்த விழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந்தேதி சாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழாவின் நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.45 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, சாமி வாகனத்தில் பவனி வருதல், கதகளி, தேவார பஜனை, திருவாதிரைக்களி, ராமாயண பாராயணம் போன்றவை நடைபெறும். வருகிற 31-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு கிராதம் கதகளி ஆகியவை நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    ஆராட்டு ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக நடைபெறும். ஆராட்டு விழா முடிந்த பின்பு கோவிலுக்கு சாமி திரும்புதல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது.
    • இப்போ விழுமோ, எப்ப விழுமோ என பரிதாபத்துடன் காட்சி அளிக்கிறது.

    108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து நாள்தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் கிழக்கு நடையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் பாதையில் கல்மண்டபம் உள்ளது. இந்த கல்மண்டபம் வழியாக அர்ச்சகர்கள், பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்கி நீராடி விட்டு கோவிலுக்கு வருவது வழக்கம்.

    ஆனால் இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் இடிந்த நிலையில் இப்போ விழுமோ, எப்ப விழுமோ என பரிதாபத்துடன் காட்சி அளிக்கிறது.

    எனவே இந்த ஆபத்தான கல்மண்டபம் வழியாக ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் அர்ச்சகர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

    எனவே புராதன நகரான திருவட்டாரில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கல்மண்டபத்தை பழமை மாறாமல் பராமரித்து சீரமைக்க வேண்டும் என திருவட்டார் அன்னபூர்ணா சேவா டிரஸ்ட் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கோரிகை மனு அனுப்பியுள்ளார்.

    ×